தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி உயர்வு..! இன்றைய நிலவரம்…

Tamil News People are shocked that the price of gold has gone up dramatically in today

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்கமானது ஏழை, எளிய மற்றும் நடுத்தர உள்ளிட்ட அனைத்து மக்களும்வாங்கும் அளவிற்கு இருந்தது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தங்கம் விலையானது படிப்படியாக உயர தொடங்கி தற்பொழுது உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் கணக்கிடப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கம் விலையானது ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் இறங்குவதுமாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க நினைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ஒரேயடியாக ரூ.960 உயர்ந்தது.

ALSO READ : ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்! NIEPMD சென்னை நிறுவனத்தில் நீங்களும் வேலை பார்க்கலாம்!

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று(டிசம்பர் 15) சவரன் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.46 ஆயிரத்து 640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை போல வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top