ரேஷன் அட்டை தாரர்களே… உங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!

Tamil News Ration card holders today Grievance camps are being held across Tamil Nadu

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பொதுவிநியோகம் என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

ALSO READ : பல வருடங்களுக்கு பிறகு இன்று நேருக்கு நேர் மோதும் ரஜினி-கமல் திரைப்படங்கள்..!

இந்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பெற குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்த ரேஷன் கார்டுகள் மூலமாகத்தான் மகளிர் உதவித்தொகை, பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெற முடியும். இதனையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி அவ்வபோது ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற செயல்களை செய்யவும் தமிழக அரசு அடிக்கடி குறைதீர் முகாம்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று(டிசம்பர்) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் அட்டை தாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தால் உள்ளிட்ட ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளையும் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top