சுரங்க விபத்தில் சிக்கி தவித்த 41 தொழிலாளார்கள் மீட்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Tamil News Rescue of 41 workers who were trapped in a mining accident praise of Chief Minister M.K.Stalin

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி என்னும் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12 ஆம் தேதி திடீரென மண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பணியில் இருந்து 41 தொழிலாளர்கள் இருபுற மண் சரிவின் நடுவில் மாட்டிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் பல்வேறு துறை நிபுணர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியானது 17 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த மீட்பு பணியின் போது இயந்திரங்கள் பளுதடைவது, மீண்டும் மண் சரிவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால், உள்ளே இருந்த 41 தொழிலாளர்களுக்கும் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை சிறு குழாயின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. அவ்வபோது தொழிலார்களிடம் வாக்கி டாக்கி மூலம் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் பேசியும் வந்தனர்.

ALSO READ : தமிழகத்தில் சொகுசு சுற்றுலா பேருந்து – தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!

இந்நிலையில், மீட்பு பணியின் 17 வது நாளான நேற்று சுரங்கத்தில் சிக்கி இருந்த 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். சுரங்கத்தின் நுழைவு வாயில் இருந்து துளையிட்டு அதில் பெரிய அளவிலான குழாய் செலுத்தி அதன் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களை மீட்ட மீட்பு குழுவினருக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மீட்பு குழுவினருக்கு பாராட்டை தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top