தமிழகத்தில் நாளை 190 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்..! மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…

Tamil News Special medical camp in 190 places tomorrow in Tamil Nadu

தமிழக தென்மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மக்களை மீட்டனர்.

இந்நிலையில், தற்பொழுது மழை ஓய்ந்துள்ளதால் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாக மக்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து அவர்களை காக்கும் வகையில், இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்த 103 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதுவரை 5 ஆயிரம் பேரை பரிசோதித்த மருத்துவர்கள் அதில். 108 பேருக்கு காய்ச்சலும், 158 பேருக்கு சளி, இருமல் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டது.

ALSO READ : தமிழகத்தில் வருகிற 26 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

மேலும், பரமக்குடி, மதுரை, திண்டுக்கல், புதுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30 மருத்துவ வாகனங்களுடன் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வாளார் என அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தமிழக அரசு நடத்தும் இந்த சிறப்பு மருத்துவ முகாமானது நாளை (டிசம்பர் 22) 190 இடங்களில் நடத்தப்பட உள்ளது என்றும் பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களை பரிசோதித்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top