கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை – தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்

Tamil news Strict action will be taken in case of bursting of firecrackers Police engaged in intensive surveillance

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிவது, பட்டாசு வெடிப்பதுதான். ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகாரட்சி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளனர். சென்னையில் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே மக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வேண்டிக்க கூடாது எனவும் சென்னை மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசுப்பட்டை குறைக்கவே இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் : டெல்லி போலீசார் அதிரடி வழக்குப்பதிவு!

தீபாவளி பண்டிகை இன்று இரவு முதலே கொண்டாடப்பட உள்ளதால் பொதுமக்கள் கட்டுப்பாட்டை மீறியும் மற்றவர்களுக்கு சொந்தரவு கொடுக்கும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை கண்காணிக்க சென்னையில் உள்ள 102 போலீஸ் நிலையங்களிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று இரவு முதலே ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் இருப்பவர்களுக்கு இடையூறாக இருப்பதால் அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் சம்ப இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தி பட்டாசு வெடிப்பர்வகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்