மிக்ஜம் புயல் எதிரொலி : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்வு!

Tamil News The price of vegetables in Koyambedu market has gone up due to heavy rains

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால மீட்பு படையினர் வீடுகளில் இருக்கும் மக்களை பாதிக்கப்புடன் மீட்டு வருகின்றனர். மேலும், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் வசிப்பவர்களுக்கு படகுகள் மூலமாக சென்று அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் பாதிப்பானது சென்னையை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதிகளில் மழை ஓய்ந்த பின்னும் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மழை காரணமாக போக்குவரத்து சரிவர இயக்கப்படாததால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ : தமிழகத்தில் 4 மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்துவைப்பு..! சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இன்றைய நிலவரைப்படி காய்கறிகளின் விலை:

  • வெங்காயம் – ரூ.55
  • தக்காளி – ரூ.32
  • கத்தரிக்காய் – ரூ.40
  • இஞ்சி – ரூ. 90
  • அவரை – ரூ.50

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்ததே இந்த விலை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் வரத்து அதிகரிக்கும் என்றும் காய்கறிகளின் விலை குறையும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top