மிக்ஜம் புயல் எதிரொலி : TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு!

Tamil News The TNPSC exams scheduled to be held today have been postponed due to Cyclone Mijam

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டி தேர்வுகளை நடித்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்துக் வருகிறது. இந்த போட்டி தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வானது டிசம்பர் 4 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாகவும், இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது.

ALSO READ : NIT திருச்சி நிறுவனம் சூப்பர் சம்பளத்தில் வேலை அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க!

இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலரும், செயலாளருமான அஜய் யாதவ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று(திங்கட்கிழமை) நடத்தப்பட இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு “மிக்ஜம்” புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த நேர்முகத் தேர்வானது வருகிற டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top