சென்னையை அடுத்து ஆந்திராவை புரட்டி எடுத்த மிக்ஜம் புயல்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Tamil News The video footage of Cyclone Mikjam ravaging Andhra Pradesh has gone viral on the internet

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்று கடந்த 3 ஆம் தேதி “மிக்ஜம்” புயலாக மாறியது. இந்த மிக்ஜம் புயலானது கடந்த 4 ஆம் தேதி மாலை நெல்லூர்- மசூலிப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரண்டு நாள் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ALSO READ : மிக்ஜம் புயல் எதிரொலி : சென்னை உள்பட 4 மாவட்ட கல்லூரிகளுக்கு வரும் 11 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு!

இந்நிலையில், மிக்ஜம் புயலானது நேற்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து 210 கி.மீட்டர் தூரத்தில் ஆந்திராவை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த புயலானது நேற்று மாலை அளவில் தெற்கு ஆந்திரா கடல்பகுதியில் கரையை கடந்தது. இந்த புயலானது சென்னையை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன் ஆந்திராவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் மிக்ஜம் புயல் கரையை கடக்கும் பொழுது சூறாவளி காற்று சுழன்று அடித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. புயல் கரையை கடந்தபோது பல்வேறு பகுதிகளில் கனமழையுடன் 100 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றும் வீசியதாக கூறப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top