தமிழகத்தில் இன்று கேஸ் சிலிண்டரின் விலை அதிரடி குறைவு..!

Tamil News Today in Tamil Nadu the price of gas cylinder is drastically reduced

இந்தியாவை பொறுத்தவரையில் எண்ணெய் நிறுவனங்கள் நாட்டின் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டரிகள் விலையை நிர்ணயம் செய்கின்றனர். அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ஒரு சிலிண்டர் விலை ரூ.918 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை இந்த மாத தொடக்கத்தில் மாற்றி அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சிறு மற்றும் குறு தொழில் செய்யும் நடுத்தர மக்கள் மிகவும் வேதனை தெரிவித்து வந்த நிலையில், இன்று வணிக சிலிண்டரின் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது.

ALSO READ : அனைத்து ரேஷன் கடைகளிலும் வரப்போகும் புதிய மாற்றம்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

அதன்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்டு ஒரு சிலிண்டர் ரூ.1,929.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,968.50 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்பொழுது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.39 குறைக்கபட்டு ஒரு சிலிண்டர் ரூ.1,929.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுவதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top