வேலூரில் புதிய விமான சேவை… இனி பெங்களூர் டூ சென்னை வெறும் 4 மணி நேரம்தான்!

Tamil News Today New flight service in Vellore Now Bangalore to Chennai is just 4 hours

மாற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டையும் நல்ல வளர்ச்சி மிகு மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தமிழகத்தில் உதான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு விமானம் அமைக்கும் பணி சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விமான சேவை பணிகள் தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வேலூர் விமான சேவை இயக்கத்தில் விமானம் இயக்க அனுமதி கிடைத்துவிட்டால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வெறும் 4 மணி நேரம் மட்டுமே ஆகும். இங்கு இயக்கப்படும் விமானங்களில் 19 முதல் 78 நபர்கள் அமரக்கூடிய அளவிற்கு மட்டுமே இருக்கைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும். இந்த விமானச் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ : ஆதார் அட்டை இலவச அப்டேட் : டிசம்பர் 14 கடைசி நாள்

இதனை தொடர்ந்து, உதான் திட்டத்தின் அடுத்தகட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக ஏர் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நெய்வேலியில் இருந்து சென்னைக்கு சிறுரக விமான சேவை துவங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு இடங்களிலும் விமான சேவை தொடங்கப்பட்டால் அது தமிழ்நாட்டுக்கு வளர்ச்சியை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top