வைகுண்ட ஏகாதசி எதிரொலி : பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!

Tamil News Vaikunda Ekadasi The price of flowers has increased manifold

தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவிலில் இன்று(டிசம்பர் 23) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கக்கப்படும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிலையில், மிகவும் பிரசித்த பெற்ற விழாவாக கருத்தப்படும் இந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை கள்ளழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவில்களில் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படும் இந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தால் வெள்ளம் சூழ்ந்து பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

ALSO READ : வைகுண்ட ஏகாதசி : திருப்பதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பை காண வந்த ஏராளமான பக்தர்கள்!

அதன்படி, கடந்த வாரம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1000 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சம்பங்கி பூ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து 200 ரூபாய்க்கும், அரளிப்பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 250 அதிகரித்து 350 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top