தமிழ்நாட்டை குறிவைக்கும் “மிஜ்சம்” புயல்..! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!

Tamil News Weather Center Announced by Mijsam storm targeting Tamil Nadu

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடலூர், சென்னை போன்ற கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்துள்ள காரணத்தினால் நேற்று இரவு முதல் சென்னையில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மிக்ஜம் புயல்:

வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ : ரோஜ்கார் மேளா திட்டம் : 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார் பிரதமர் மோடி!

இந்நிலையில், “மிக்ஜம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புயலானது வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்த “மிக்ஜம்” புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top