தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் (TNPSC, TRB, MRB) முக்கிய அறிவிப்பை அரசாணை வெளியிட்டுள்ளது! என்ன அறிவிப்பு? வாங்க பாக்கலாம்…

TAMIL NADU GOVERNMENT LATEST NEWS RELEASED NOW

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்ய தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

Tamilnadu Government Important Announcement in Competitive Examinations Latest News Updated

Tamilnadu Government Important Announcement in Competitive Examinations Latest News Updated

தமிழக அரசாணையில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் காட்டாயம்.

தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

மேலே குறிப்பிட்டவாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் கட்டாயம் ஏன் தெரியுமா?

TNPSC சார்பில் இனி நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வை கட்டாயமாக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மின்வாரியம் பொதுப்பணித்துறை நியமனத்தில் தமிழே தெரியாத வாட மாநிலத்தவர் பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


LATEST JOB NEWS HERE:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button