தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனை காக்கவும் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உருவாக்கப்பட்ட திட்டம் தான் “எண்ணும் எழுத்தும் திட்டம்”. இந்த திட்டத்தின் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் மற்றும் எழுதும் திறனை அதிகரிக்க செய்ய முடியும்.
இந்நிலையில், இந்த எண்ணும் எழுத்தும் திட்டமானது நடப்பு ஆண்டு முதல் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது மூன்று நிலைகளில் இருக்கும். முதல் நிலையை ’அரும்பு’ என்றும், இரண்டாம் நிலையை ’மொட்டு’ என்றும், மூன்றாம் நிலையில் ’மலர்’ என்றும் அழைக்கின்றனர். மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப மாணவர்கள் ஒவ்வொரு படிகளாக கற்றுக் கொடுக்கப்படும்.
Also Read : பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் இன்று காலமானார்..!
மேலும், இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 35 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிறப்பு செயல்பாடுகள் மூலம் படித்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது இந்த திட்டம் குறித்து தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் முக்கிய நடைமுறை அமலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.