மாதம் ரூ.30000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை ரெடி! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்…

DHS Theni Recruitment 2023: தேனி மண்டல திட்ட வடிவாக்க அலகிற்கு (Regional Programme Management Unit, Theni Region) ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட திட்ட மேலாளர் (District Program Manager) மற்றும் தரவு உதவியாளர் (Data Assistant) பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை. இப்பணிக்கு மாதம் ரூ.15000 முதல் ரூ.30000 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DHS Theni Recruitment 2023
DHS Theni Recruitment 2023

District Program Manager பணிக்கான கல்வித்தகுதி:

மாவட்ட திட்ட மேலாளர் பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு (BSMS) முடித்திருக்க வேண்டும். சித்த மருத்துவ பட்டப்படிப்பில் மேற்படிப்பு (M.D. Siddha) முடித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கணினி பயன்பாடு பற்றிய கல்வியறிவு பெற்றிருப்பவர்களுக்கு, பொதுசுகாதாரத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Computer Application பணிக்கான கல்வித்தகுதி:

தேனி தரவு உதவியாளர் பணியிடத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வாயிலாக, பின்வரும் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Computer Application / IT / Business Administration / B.E. in Computer Science / B.Tech – IT. குறைந்தபட்சம் ஒருவருடம் பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு பற்றிய கல்விச்சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டட்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுசுகாதாரத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Also Read: BSNL நிறுவனத்தில் Diploma Apprentice பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு…

தேனி DHS வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை:

  1. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://Theni.nic.in/ இணையதளத்திற்குச் செல்லவும், பின் “Recruitment” என்பதைக் கிளிக் செய்து, “Data Assistant” பதவியைக் கிளிக் செய்யாவும், விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி, அதை நிரப்பவும்
  2. தேவையான இணைப்புகளைச் சேர்த்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, அதை கீழேகொடுகப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி:

மாவட்ட நலச்சங்கம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலகம்,
50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை,
அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், தேனி – 625512.

இப்பணிபற்றி மேலும் விரிவான விவரங்கள் அறிய தேனி மாவட்ட Notification link-யை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு: விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 30 ஆண்டுகள். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…