
தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகள் பதவிகளுக்கு ஏற்ப குரூப்களாக பிரித்து நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலிப் பணியிடங்களும் எழுத்து தேர்வின் மூலமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி காலிப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மாற்று நேர்முகத் தேர்வினை அண்ணா பல்கலைகழகம் மூலம் நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ALSO READ : நெருங்கி வரும் தீபாவளி : சென்னையில் ஆட்டோக்கள் இயக்க தடை விதித்த காவல்துறை!
இந்நிலையில், சென்னையை தவிர மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் பொதுப்பிரிவு, சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு ஆகிய பிரிவுகளில் மொத்தம் 2 ஆயிரத்து 534 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தற்பொழுது எழுத்து தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் என்னென்ன என்பதை தயாரிக்க துறை வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், இட ஒதுக்கீடு சுழற்சி முறை, எழுத்து தேர்வின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களையும் அடுத்த 30 நாட்களுக்குள் தயாரித்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.