நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை : மக்களுக்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்! தமிழக அரசின் புதிய திட்டம்!!

Tamilnadu News Approaching Pongal Festival Double Jackpot Awaiting People

தமிழகர்கள் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை உள்ளது. தை மாதத்தின் முதல் நாள் முதல் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,, பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி வருகிறது. இந்த பொங்கல் பரிசில் பொங்கல் வைக்க தேவையான அரிசி, பருப்பு, வெள்ளம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டை தார்களுக்கும் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. அதேபோல் 2023 ஆம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை வர இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்த பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் என்ன பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

ALSO READ : ஜியோ சிம் யூஸ் பண்றவங்களுக்கு புதிய ஆபர் வந்தாச்சு..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…

இந்நிலையில், தமிழக தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும் கன்னியாகுமரி மாவடடத்தில் உள்ள மக்களுக்கு ரூ.1000 நிவாரணமும் வழங்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, அடுத்த மாதம் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகையும் பொங்கல் பண்டிகையை ஒட்டி முன்கூட்டியே வழங்கப்படும் எனவும் பொங்கல் பரிசுத் தொகையான ரூ.1000 மும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top