தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்க வாய்ப்பு..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

Tamilnadu News Due to the storm there is a possibility of postponing the mid-term exam

நடப்பு ஆண்டு பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழக பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை மற்றும் அதையொட்டி பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது.

ALSO READ : மிக்ஜம் புயல் எதிரொலி : சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுபாடு!

இதனையடுத்து, சென்னையில் திடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த மழை இன்று காலை சற்று ஓய்ந்துள்ளது. மழை ஓய்ந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால் இந்த மாவட்டங்களில் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நாளை மறுநாள்(டிசம்பர் 7) நடைபெற இருந்த அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top