தமிழகத்தில் நேற்று இரவிலிருந்து பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஒரு சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது, சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்தது.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் சூரைக்காற்றோடு பலத்தமழையாக அங்குள்ள ஓரிரு பகுதிகளில் காணப்பட்டது. இதனால் பல பகுதிகளில் சாலைகளிலும் மின்கம்பங்களிலும் மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. அதுவுமல்லாது, அந்த பகுதிகளில் உள்ள ஒரு செல்போன் டவர் கூட முறிந்து விழுந்தது. இதேபோல திருப்பூரின் இதர சில பகுதிகளிலும் சூறைக்காற்றால் மரங்களும் மின்கம்பங்களும்கூட முறிந்து விழுந்தன. மேலும், வேருடன் 200 க்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்தன. இது, அப்பகுதிகளிலுள்ள விவசாயிகளை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரைத் தொடர்ந்து, கோவையிலும் பலத்த காற்றுடன் மழை காணப்பட்டது. இதனால் அங்கு இருக்கும் அன்னூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தடுமாற்றமடைந்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையாக உள்ள கோவை – சத்தியமங்கலம் செல்லும் வழியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்தும் பாதித்தன. இதேபோல செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழையாகவும், பலத்த மழையாகவும் பெய்திருந்தன. இதனால் வெப்பத்தின் தாக்கம் சிறிது குறைந்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) கோவை, நீலகிரி, தருமபுரி மற்றும் சேலம் போன்ற 10 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையாகவும், தொடர்ந்து மிதமான மழையாக சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட இடங்களின் ஓரிரு பகுதியில் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையமானது அறிவித்திருக்கின்றது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- DHFWS Cooch Behar Recruitment 2023: 60 Yoga Instructor Jobs Await You!
- வாட்சப்ல இப்படி ஒரு அப்டேட்டா..! நீங்களும் தெரிஞ்சுக்கோங்க… உங்களுக்கும் உதவும்…
- Lucrative Opportunity: Earn Rs.60,000 Per Month in CDAC Recruitment 2023 | Apply Online Now..
- தமிழ்நாடு அரசு வேலை! நல்ல சம்பளம்! அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய வேலை அறிவிப்பு!
- அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலை வாய்ப்பு! மாதம் 30000 ரூபாய் சம்பளம்! விண்ணப்பிக்க விரையுங்கள்!