இன்ஜினியரிங் படித்தவர்களும் இனி ஆசிரியர் தகுதி தேர்வு (TET Exam) எழுதலாம்
Tamilnadu TET Exam Engineering Candidates Can Apply
பொறியியல் மாணவர்கள் டெட் தேர்வு (TET Exam) 2019-2020 எழுதலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் கணித ஆசிரியராக மாற விரும்பும் B.E/B.Tech பட்டதாரிகளுக்கு டெட் தேர்வை (TNTET Exam) எழுத தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொறியியல் பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் டெட் தேர்வு எழுதலாம். அதன்படி, நீங்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற்றால், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகிவிடுவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. Tamilnadu TET Exam Engineering Candidates Can Apply
இன்ஜினியரிங் படித்தவர்களும் இனி ஆசிரியர் தகுதி தேர்வு (TET Exam) எழுதலாம்
ஆசிரியர்கள் பணியாளர் தேர்வு வாரியம் – Teachers Recruitment Board 2019-2020
பொறியியல் (B.E/B.Tech) படிப்புடன் B.Ed முடித்தவர்கள் TET எழுதி ஆசிரியர் ஆகலாம் – தமிழக அரசு அறிவிப்பு
கலை மற்றும் அறிவியல் படிப்பை படித்து முடித்தவர்கள் மட்டுமே B.Ed படிக்கலாம் என்ற நிலையை மாற்றி 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் மாணவர்களும் பி.எட் படிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது B.E/B.Tech முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராகலாம் என சமநிலைக் குழு அரசாணை வெளியிட்டுள்ளதால், டெட் தேர்வெழுத தகுதி பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.