குளு குளுனு சாரல் காற்றுடன் கொட்டும் குற்றால அருவி! வெக்கேஷன்ல அலைமோதும் சுற்றுலா பயணிகள்…!

Today News in Tamilnadu 2023

Today News in Tamilnadu 2023
குளு குளுனு சாரல் காற்றுடன் கொட்டும் குற்றால அருவி! வெக்கேஷன்ல அலைமோதும் சுற்றுலா பயணிகள்...! 2

தமிழ்நாட்டில் உள்ள அருவிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ‘குற்றாலம்’ ஆகும். இந்த அருவி தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. ‘குறு ஆல்’ என்பது ஒரு வகையான ஆலமரம். இம்மரம், அந்த பகுதியில் அதிகமாக உள்ளதால் ‘குற்றாலம்’ என பெயர் வந்தது. மழைக் காலத்தில், அருவியில் இருந்து விழும் நீரை ரசிப்பதற்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆதலால், குற்றாலம் அனைவரையும் கவரக் கூடிய சுற்றுலா தளமாக உள்ளது. இதுமற்றுமின்றி, அங்கு பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, பாலருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி, செணபகாதேவியருவி போன்ற 9 வகையான அருவிகள் உள்ளன.

Also Read>> இறுதிப்போட்டியில் போராடி தோல்வி அடைந்த போபண்ணா ஜோடி – அமெரிக்க ஓபன் டென்னிஸ்

மிக முக்கியமாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து நீராடி மகிழ்வர். ஆனால், இந்த ஆண்டு மலை அதிகமாக பொழியாத காரணத்தினால் சீசன் களைக்கட்டவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளும் அங்குள்ள வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மற்றும் அப்பகுதியில் உள்ள அருவிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து அருவிகளிலும் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதை அறிந்த மக்கள் வார விடுமுறை நாட்களில் அங்கு சென்று, நீராடி மற்றும் கண்டு மகிழ்கின்றனர். சுற்றுல்லா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.