இந்த கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்! கூடுதல் போலீசார் குவிப்பு

Terrorist threat to this temple Accumulation of additional police-Terrorist Threat To Rameswaran Temple Police On Alert

தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலும் ஒன்றாகும். ராமேசுவரம் ஆலயம் தமிழகத்தில் உள்ள இந்திய எல்லையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராமேசுவரம் கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்த நிலையில், கோவிலின் நான்கு வாசல் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே கோவிலின் மேல்புற தட்டு ஓடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உலா வருவதாகவும் அவர்கள் செல்போன்களில் கோவிலின் கருவறை மற்றும் கோபுரங்களை புகைப்படம் எடுத்தும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட போலீசார் கூடுதலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here