
தளபதி நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில லியோ படத்தில நடிச்சார். போன மாசம் 19 ஆம் தேதி அப்போ தியேட்டர்ல ரிலீஸ் ஆனது. அதுமட்டுமில்ல, உலக அளவுல மொத்தமா 540 கோடி ரூபாய்க்கு மேல வசூல அள்ளி ஜெயிலர் பட வசூலை முறியடிசிருச்சி. இதுக்கான போஸ்டர் படக்குழு ஒன்னு வெளியிட்டாங்க.
இந்த படத்த அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு புதுசா எடுக்குற படத்தில நடிகர் விஜய் நடிக்க போறார். இதுல, பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த ஆகாஷ் இவங்கெல்லாம் இந்த படத்தில முக்கிய வேடத்தில நடிக்க போறாங்க. இப்போதைக்கு இந்த படத்துக்கு தளபதி 68 அப்டின்னு பேரு வெச்சிருக்காங்க. கல்பாத்தி எஸ் அகோரம் சார்பா ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிற இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜ மியூசிக் போடுறாரு. மதன் கார்க்கி பாடலாசிரியரா இணையுறாரு.
Also Read >> கையில கரண்டியோட நிக்கும் நயன்தாராவோட அன்னபூரணி! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
இந்த படத்தோட ஷூட்டிங் வெளிநாட்டுல நடக்க போகுதுன்னு தகவல் வந்துச்சி. அதே மாதிரி தளபதி 68 படக்குழு தாய்லாந்து நாட்டுக்கு கிளம்பி போய்டாங்க.