இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வேலைகளையும் எளிமையாக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த தொழினுட்பங்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மின் விநியோகம் மற்றும் அவற்றின் கணக்கீடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தது. மின்வாரியத்தின் பல்வேறு பணிகளை எளிதாக்கும் வகையில் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்பொழுது வரை மின்சார வாரிய ஊழியர்கள் தான் வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்து வருகின்றனர். இதனால் பல மோசடிகள் ஏற்படுவதாக பலரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதாவது மின்சாரத்தை பயன்படுத்தாமலேயே அதிக மின் கட்டணம் வசூலிக்க்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இத்தகையை புகார்களை நிவர்த்தி செய்யும் வகையில், வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
ஸ்மார்ட் மீட்டரானது டிஜிட்டல் முறையில் செயல்படும் என்று தெரிவிகபட்டுள்ளது. இதன் மூலம் மின் பயன்பாட்டை எளிதில் அறிய முடியும். இந்த ஸ்மார்ட் மீட்டரானது தானாகவே மின் பயன்பாட்டை அளவீடு செய்து மின் இணைப்புடன் கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு sms வந்துவிடும். அதில், பணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட விபரங்களும் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.