சேலத்தில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்..!

The Chief Minister personally inspected the Smart City works in Salem-Salem Smart City Project

தமிழக முதல்வர் ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு நிர்வாக செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்ட நிகழ்ச்சியினை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்த முதலமைச்சர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த திட்ட பணிகளை ஆய்வு செய்யும் இந்த நிகழ்ச்சியானது இன்று, நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு திட்டம் குறித்து ஆலோசனை கூறினார்.

சேலத்தில் நடைபெறும் கள ஆய்வில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து சேலம் வந்தடைந்தார். இந்நிலையில், தற்பொழுது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here