மெல்ல மெல்ல வேகமெடுக்கும் கொரோனா தொற்று… பீதியில் மக்கள்!!

The corona virus is gradually accelerating People are panicking

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் என்ற இடத்தில் கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். இந்நிலையில், இந்த கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடித்து அதனை அனைவருக்கும் செலுத்தியதற்கு பின் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 203 நாட்களில் இல்லாத அளவில் நேற்று 6 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 6,050 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,155 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 259 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,253 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 111 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN