கடந்த மார்ச் 25ஆம் தேதி மலேசியாவின் ஜோஹோரில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தனது தந்தை பஃபர் மீனை உள்ளூர் கடையில் வாங்கி வந்ததாகவும் தம்பதியரின் மகள் ஐ லீ கூறுகிறார். “என் பெற்றோர் பல ஆண்டுகளாக அதே மீன் வியாபாரியிடம் மீன் வாங்குகிறார்கள், எனவே என் தந்தை அதைப் பற்றி ஏதும் யோசிக்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.
மதிய உணவிற்கு மீனை சுத்தம் செய்து சமைத்துச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, லீயின் தாய் லிம் சியூ குவானுக்கு உடல் நடுங்க ஆரம்பித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவரது கணவருக்கும் ஒரு மணிநேரத்திற்குப் இதேபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. உடனே தம்பதியரின் மகன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அன்று மாலையே லிம் சியூ இறந்துவிட்டார். ஐ லீயின் தந்தையும் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் உள்ளார்.
பஃபர் மீனில் உள்ள நச்சுத்தன்மை நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியது. அதன் விளைவாக இதய செயலிழப்பு, சுவாச பிரச்சினையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சம்பவம் நடந்த அன்று ஜோஹோர் மீன் சந்தையில் விற்கப்பட்ட அனைத்து மீன்களும் மாவட்ட சுகாதார அலுவலகத்தால் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டனர்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India
- TN Govt Jobs 2023 | Get the Latest Tamilnadu Government Job Alert 2023
- Railway Recruitment 2023 | இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்