கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாள் அரசு விடுமுறை! – அறிவிப்பு வெளியீடு

The day after Christmas is a public holiday Notification release West Bengal Govt Declares State Holiday On Dec 26

கிறிஸ்துமஸ் பண்டிகை வருடந்தோறும் டிசம்பர் 25 ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படிகிறது.

இந்நிலையில், டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் கிறிஸ்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரிசுகளையும் அன்பையும் பரிமாறிக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு இடையில் இன்னும் நெருக்கம் ஏற்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கொண்டாடபப்டுகிறது.

இதையடுத்து, இந்த வருடமும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் மேற்கு வங்காள அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதியும் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காள அரசு அறிவித்த அறிவிப்பின்படி, மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பிற அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வருகிற டிசம்பர் 26-ந்தேதி கிறிஸ்துமசுக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here