பூனையின் மசாஜில் சொகுசாக உறங்கிய நாய்! வைரல் வீடியோ

0
The dog slept luxuriously under the cat's massage Viral video-Cat Massage To Dog Viral Video

சமூக ஊடக உலகம் என்பது ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.

இந்நிலையில், விலங்குகளின் காமெடியான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், நாய் மற்றும் பூனைகள் செய்யும் சேட்டைகள், விளையாட்டுகள், சண்டைகள் போன்ற பல வித காட்சிகள் அனைவரது கவனத்தையும் அசாசல்டாக ஈர்த்து வருகின்றன.

மனிதர்கள் கடினமாக வேலையை மேற்கொள்ளும்பொழுது உடல் வழி மற்றும் சோர்வை ஏற்படுவது வழக்கம். அத்தகைய வழியை போக்குவதற்கு மசாஜ் செய்வது நமக்கு தெரிந்த ஒன்றே. அதுபோன்று விலங்குகளும் மசாஜ் செய்யும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நாய் ஒன்று தரையில் அமைதியாக படுத்துக்கொண்டு இருக்கிறது அப்போது ஒரு பூனை ஒன்று வந்து படுத்திருக்கும் நாய்க்கு இதமளிக்கும் வகையில் மசாஜ் செய்து விடுகிறது. அந்த நாயும் பூனையின் மசாஜில் மயங்கி சொகுசாக படுத்துக்கொண்டு இருக்கின்றது. இந்த வீடியோ பல ஆயிரம் பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here