ட்விட்டர் ஓனரையே கலாய்த்த பிரபல நடிகர்! நச்சுனு கேட்ட கேள்வி? இணையத்தில் வைரல்

The famous actor who made the owner of Twitter Question asked by Nachu Viral on the internet-Cibi Sathiyaraj Twitt

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக கருதப்படுவது ட்விட்டர் செயலியாகும். தற்பொழுது இந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் கையகப்படுத்தினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு உரிமையாளரானதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ட்விட்டர் செயலியை உலக தலைவர்ர்கள், தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இந்த புளூ டிக் டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். இதற்குமுன் புளூ டிக் இலவசமாக வழங்கப்பட்டது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபர்றியதிலிருந்தே சில மாற்றங்களை கொண்டு வர போவதாக தெரிவித்த நிலையில், இனி ‘புளூ டிக்கிற்கு’ மாதம் 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 660 ரூபாய் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு பிரபல நடிகரான சிபி சத்யராஜ் எலான் மஸ்க்கின் ட்விட்டுக்கு கிண்டலாக ட்வீட் செய்துள்ளது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில், உங்களுடைய ‘கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்’ என்று ஜாலியாக சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ள நிலையில் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here