உலகம் முழுவதும் இன்று பிரபல “எக்ஸ்” தளம் திடீர் முடக்கம்..!

The famous X site has been shut down since this morning all over the world

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக எக்ஸ்(டுவிட்டர்) தளம் உள்ளது. இந்த எக்ஸ் தள நிறுவனத்தை உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன் வாங்கினார். எலான் மஸ்க் நிறுவனத்தின் உரிமையாளராக பதவி ஏற்றத்தில் இருந்தே எக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.

அதன்படி, முதல் நடவடிக்கையாக எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்தார். அதன்பின், முன்னதாக டுவிட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த நிறுவனத்தின் பெயரை தற்பொழுது “எக்ஸ்” என்று மாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ப்ளூ டிக் என்னும் அதிகாரப்பூர்வ கணக்கிற்கு கட்டணத்தையும் வசூல் செய்தார். இதுபோன்ற பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டாலும் மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கப்பதற்காக அதிக பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

ALSO READ : பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்க அரசு ஆலோசனை..! சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!

இந்நிலையில், நன்றாக இயங்கி வந்த எக்ஸ் தளம் உலகம் முழுவதும் இன்று காலை முதல் திடீரென முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து மற்ற சமூக வலைதளங்களில் எக்ஸ் பயனர்கள் புகார்களை பதிவு செய்து வருகின்றனர். இணையதளம் முடங்கியதற்கான காரணம் குறித்து எக்ஸ் நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top