
ஹரிஷ் கல்யாண் அவர்கள் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘பார்க்கிங்’ படத்தில் நடிக்கிறார். அதோடு இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், ராம ராஜேந்திரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
மேலும் இப்படமானது பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் ஆதரவில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. மேலும் இந்த படம் நகரங்களில் எதிர்கொள்ளும் பார்க்கிங் சிக்கல்களைத் தொடும் ஒரு திரில்லர் நாடகம் என்று கூறப்படுகிறது.
ALSO READ : லியோ பட வெற்றிவிழா! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! காவல்துறை அனுமதி!
மேலும் சினிமா எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய இயக்குனர் “பார்க்கிங் தலைப்பு குறிப்பிடுவது போல மிகவும் பொருத்தமான மற்றும் அன்றாட கவலையைக் கையாள்கிறது. சமீப காலங்களில் கார் உரிமையாளர்கள் குடியிருப்புகள் முதல் தெருக்கள் வரை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பார்க்கிங் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள்தான் இந்தப் படத்தைத் தயாரிக்க என்னைத் தூண்டியது.” மேலும் அவர் “நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை முன் தயாரிப்பில் செலவிட்டோம். நான் பலரிடம் பேசினேன். மேலும் பார்க்கிங் தொடர்பான அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் கதையை உருவாக்குவதற்கான உள்ளீடுகளாக செயல்பட்டன ” என்றும் அந்த பேட்டியில் கூறினார்.
அந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் அவர்கள் ஐடி நிபுணராக நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி மற்றும் எடிட்டர் என்.கே.ராகுல். அதோடு இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்து உள்ளார். மேலும் பார்க்கிங் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடலான ‘செல்ல கல்லியே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.