மின் கட்டணம் பற்றி முதல் மந்திரியின் பேச்சால் பரபரப்பு!

The first minister's speech about electricity charges caused excitement- Nitish Bats For One Nation One Power

நாடு முழுவதும் மின்சாரத்தை பல வித பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது மின்சாரம் எந்த அளவிற்கு தேவைபடுகிறதோ அதே அளவிற்கு மின் கட்டணமும் உயர்ந்து வருகிறது. மின் கட்டணம் குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறுகையில், நமது நாட்டில் ஒரே நாடு ஒரே மின் கட்டணம் என்ற கொள்கையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இதையடுத்து, பீகார் மாநிலத்தை ஒப்பிடுகையில் மற்ற மாநிலங்கள் குறைந்த விலைக்கே மின்சாரம் பெறுகின்றனர். ஆனால் பீகார் மாநிலத்தில் அதிக விலைக்கு மின்சாரத்தை பெற்று அதனை குறைந்த கட்டணத்தில் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்குகிறோம். இந்த நிலைமையை போக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் சிலர் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் .அனால் அதை பற்றி எல்லாம் நான் கலவை படவில்லை இருப்பினும் பீகார் மாநிலத்தில் அரசு சார்பில் மின் நுகர்வோருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெறும் 700 மெகாவாட்டாக இருந்த மின் நுகர்வு தற்போது பல மடங்காக உயர்ந்து 6,738 மெகாவாட்டாக உள்ளது. மின்கட்டணம் தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களை போக்கும் வகையில் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதில், பீகார் மாநிலத்தில் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மின் மீட்டர்களை அனைத்து இடங்களிலும் பொருந்துமாறு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஓவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பை இணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here