ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்..! இணையத்தில் வைரல்!!

ரஷ்யா கடந்த 11 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த நிலையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை நுழைந்தது. அதன்பிறகு, நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பியதாக ரஷ்யா மாநில விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

The first photo of the moon sent by Russia Luna 25 spacecraft Viral on the Internet read now

இந்த லூனா 25 ஆனது வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என்று ரஷ்யாவின் விண்வெளித் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்தார். ஆனால், ஆகஸ்ட் 23 தேதி தரையிறங்கும் என ஏற்கனவே ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் குறிப்பிட்டு இருந்தது. இந்த விண்கலம் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் தரையிறங்க ஏதுவான நேரத்தில் நிலவில் தரையிரங்கும் என கூறப்பட்டு இருந்தது.

Also Read : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் வேலை! மத்திய அரசு வேலையில விருப்பமுள்ளவங்க அப்ளை பண்ணுங்க!

இதன்படி, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செலுத்தப்பட்டது என நேற்றைய தினம் லூனா 25 விண்கலமானது தகவல்கள் வெளியானது. அதன்படி, இன்று சுற்றுப்பாதையில் சுற்றி வரும் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளது. மேலும் லூனா 25 விண்கலமானது, சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருடம் செயல்படும் படி, வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நிலவின் தென் துருவத்தில் நீர் உள்ளதா உள்ளிட்ட முக்கிய ஆய்வுக்காக ரஷ்யா லூனா 25 ஐ விண்ணில் செலுத்தியுள்ளது என ரோஸ்கோஸ்மோஸ் குறிப்பிட்டுள்ளது.

லூனா 25