வானில் நிகழும் மிகவும் அரிதாக நிகழ்வாக சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பார்க்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஒரு அரிதான நிகழ்வு நாளை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வானில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் சூப்பர் நீல நிலவு நாளை(புதன்கிழமை) விண்ணில் தோன்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை தொலைநோக்கி போன்ற எந்த உபகரணங்கள் இல்லாமல் சாதாரண கண்களால் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சூப்பர் ப்ளூ மூன் நடைபெறும் போது வழக்கமாக தோன்றும் பவுர்ணமியை விடவும் நாளை மறுதினம் நிலவு கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும் என்றும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read : நேர்காணலில் TNAU வேலை அறிவிப்பு! சீக்கிரமா ரெடி ஆகுங்க இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு! முழு தகவல்களுடன்…
இதையடுத்து, கடைசியாக இந்த சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வானது கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதன் பின்னர் 2024 ஆகஸ்டில் சூப்பர் ப்ளூ மூன் தென்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டே இந்த நிகழ்வு நிகழ உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நாளை(புதன்கிழமை) வானில் தோன்றவுள்ள இந்த அரியவகை நிகழ்வை பார்க்க வேண்டும் என்று நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன.