
தமிழக அரசின் கீழ், பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மூலமாகத்தான் நிரப்பட்டு வருகிறது. இந்த அரசு பணியாளர் தேர்வாணையமானது பதவிகளுக்கு ஏற்ப குரூப்களாக பிரித்து அந்தந்த குரூப்களுக்கு ஏற்ப ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மட்டுமே அரசு துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
அந்த வகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2 க்கான முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு கட்டுரை எழுதிய ஒரு தேர்வாளர் கட்டுரையின் இறுதியில் ஜெய்ஹிந்த் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என்று எழுதியிருந்தார். கட்டுரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதால் இந்த விடைத்தாள் செல்லாது என்று தேர்வாணையம் அறிவித்தது.
ALSO READ : தீபாவளி பண்டிகை : சொந்த ஊருக்கு போறீங்களா? ஆம்னி பேருந்துகள் பற்றிய புகாரை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!
இதுகுறித்து அந்த தேர்வாளர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பிற்கு ஜெய்ஹிந்த் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என்று எழுதியது பொருத்தமாகத்தான் உள்ளது என்று கூறி இந்த விடைத்தாளை உடனடியாக மீண்டும் மதிப்பீடு செய்து அவர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் அவருக்கு உடனடியாக பணிநியமன ஆணையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.