Today News in Tamilnadu 2023

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி, விநாயகர் உருவ சிலையை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்வது பாரம்பரிய நடைமுறைகளில் ஒன்றாகும். மக்கள் விநாயகர் சிலைக்கு பூ மாலை அணிவித்து, வீடு முழுவதும் பூக்களால் அலங்கரிப்பர். எனவே பூக்களின் தேவையானது மிகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.600 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினத்தில் கிலோ ரூ.1500 க்கு உயர்ந்துள்ளது. மேலும், ரூ.400 க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ ரூ.800 ரூபாய்க்கும், ரூ.150 க்கு விற்பனை செய்யப்பட்ட அரளரிபூ ரூ.200 க்கும், ரூ.400 விற்பனை செய்யப்பட்ட முல்லைபூ ரூ.800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, பூக்களின் வரத்தும் சற்று குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.