சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாவட்ட கலெக்டர்களுடன் அவசர ஆலோசனை! என்ன காரணம்?

The important news that was published recently Chief Minister M.K. Urgent consultation with 3 District Collectors of Stalin what is the reason watch it now

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழுப்புரத்தில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டமானது நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நான்கு மாவட்டத்தினுடைய எஸ்.பி.க்கள் பங்கேற்றனர்.

முதலில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் கள்ளச் சாராயத்தினால் பாதிப்படைந்து சிகிச்சையில் உள்ளவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சையில் இருக்கும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து உடல்நிலை குறித்தும் சிகிச்சை முறைகள் குறித்தும் அவர்களிடம் விசாரித்தறிந்தார்.

தொடர்ந்து நிருபர்களை சந்தித்து இதுத் தொடர்பாக விளக்கமளித்தார். அப்போது “மெத்தனாலை கள்ளச் சாராயத்தில் பயன்படுத்தியதின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டிருக்கின்றது. தொடர்ந்து அதனை குடித்து உடல்நிலை மோசமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள் அனைத்தும் உரிய முறையில் வழங்கப்படுகின்றன. மேலும் சிபிசிஐடி விசாரணைக்கு இந்த உயிரிழப்பு தொடர்புடைய வழக்குகள் கொண்டு செல்லப்படும்.

இதனையடுத்து கள்ளச் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்கிற உத்தரவை பின்பற்ற தவறிய அனைவர் மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல் துறையானது இந்த கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபட்டிருந்த அனைவர்மேலும் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாது மரக்காணம் விபத்தில் சம்பந்தப்பட்டிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலைகளின் மத்தியில் கள்ளச் சாராயத்தினால் இதுவரை 11 பேர் விழுப்புரத்திலும், தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பெரும் உயிரிழந்திருக்கின்றனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN