ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு செக் வைத்த வருமான வரித்துறையினர்…! 40 இடங்களில் சோதனை!

0
The income tax department gave checks to companies that supply ration goods Test in 40 places-Income Tax Department Conducted Inspection At 40 Places

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்காக பாமாயில் மற்றும் பருப்பு போன்றவற்றை சப்ளை செய்யும் நிறுவனங்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் சுமார் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது அருணாச்சலம் இம்பேக்ஸ் என்ற நிறுவனம் தான் அதிக ஆளவு உணவுப்பொருட்களை தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு சப்ளை செய்வதால் அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், தண்டையார் பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆப் கம்பெனி மற்றும் இண்டர்கிரெட் சர்விஸ் குரூப் போன்ற பாமாயில் மற்றும் பருப்புகளை சப்ளை செய்யும் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் நடத்தும் இந்த சோதனை எதற்காக நடைபெறுகிறது சோதனை நடைபெறும் இடத்தில் என்ன கைபற்றப்பட்டது உள்ளிட்ட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here