உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் இந்த தொடரில் மோதவுள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாள அணிகள் விளையாடினர். இதில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.
இந்நிலையில், உலகை கோப்பைக்கான மூன்றாவது போட்டியில் இந்தியா Vs பாகிஸ்தான் அணிகள் இன்று(சனிக்கிழமை) களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ்க் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நீண்ட நாட்களுக்கு பின் இந்த உலகை கோப்பை போட்டியில் இந்திய அணியின் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார்.
Also Read : தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கப்போகுது..! வானிலை மையத்தின் புதிய எச்சரிக்கை!!
இதையடுத்து, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 4.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது. அப்பொழுது எதிபராத விதமாக திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையின் காரணமாக இந்த மேட்ச் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.