ரேஷன் கார்டு பற்றிய மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் வெளியிட்டுள்ளார்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரேஷன் கார்டு பற்றிய புதிய செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. மக்கள் அனைவரும் சந்தோசப்படும் வகையில் ஒவ்வொரு செய்தியும் உள்ளது. முன்பெல்லாம் ரேஷன் கார்டு வாங்குவது மிகவும் சிரமமாயிருக்கும். ஆனால், தற்போது அந்தளவுக்கு கஷ்டபட வேண்டியத்தில்லை. இப்போது எல்லாமே கணினி மையமாக மாறியுள்ளது. மக்களுக்கு இது எளிதாக பயன்படும் வகையில் உள்ளது. தற்போது அமைச்சர் சக்கரபாணி அவர்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆன்லைனில் விண்ணப்பித்தால் புதிய ரேஷன் கார்டு வீடு தேடி வரும் என்று அமைச்சர் சக்கரபாணி அவர்கள் அறிவித்துள்ளார். ரேஷன் கார்டு காணாமல் போனாலோ அல்லது திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால், புதுபித்த ரேஷன் கார்டை பெற நேரில் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், இனி புதுபித்த ரேஷன் கார்டை தபால் மூலம் வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 45 ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் அமைந்துள்ளது. இனிமேல், உங்கள் ரேஷன் கார்டு காணாமல் போனாலும் சரி, திருத்தம் செய்தாலும் சரி உங்க வீட்டுக்கே புது ரேஷன் கார்டு வந்துவிடும். ஹேப்பியா இருங்க மக்களே! ரேஷன் கார்டுக்காக இனிமே நீங்க அலையவேண்டியதில்லை..!

The minister chakrapani has announced the happy news about the ration card! Official announcement! read it now

RECENT POSTS IN JOBSTAMIL.IN