உதயநிதி என்ற பெயரே சமஸ்கிருத பெயர்தானே… திடீரென பாயும் அர்ஜுன் சம்பத்…!

Today Political News in Tamilnadu

Today Political News in Tamilnadu
உதயநிதி என்ற பெயரே சமஸ்கிருத பெயர்தானே... திடீரென பாயும் அர்ஜுன் சம்பத்...! 2

சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை குறித்து எதிர்ப்பு தெரிவித்தார். இவை தேசிய அளவில் பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உதயநிதியை குறித்து விமர்சித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நான் சுட்டிக் காட்டுவது என்னவென்றால், பிளஸ்2 பாடப்புத்தகத்தில் சனாதனம் மற்றும் இந்து தர்மம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அதை தான் குழந்தைகளும் படிக்கிறார்கள். அது போல நீங்களும் பிளஸ்2 பாஸ் ஆகி லயோலா கல்லூரியில் படித்திருக்கிறீர்கள். இல்லை, அதுவும் படிக்கவில்லையானு தெரியவில்லை.

உதயநிதி என்ற பெயரே சமஸ்கிருத பெயர்தான். கருணாநிதி, தயாநிதி, இன்பநிதி இந்த பெயர்கள் எல்லாமே சமஸ்கிருத பெயர்தான். சனாதனம் என்பது மதத்தோடு, ஜாதியோடு தொடர்புடையதும் அல்ல. அது தர்மத்துடன் தொடர்புடையது. சனாதனத்தின் அடிப்படையே முதலில் தர்மம்தான். சனாதன தர்மம் என்பது மிக பழமையானது. அது எந்த அளவிற்கு பழமையோ அந்த அளவிற்கு அது புதுமை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் சனாதனம். இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதை ஒருபோதும் இழிவுப்படுத்த கூடாது. சனாதனம் ஒரு கொசு, எச்ஐவி என்றெல்லாம் பேச கூடாது. முதலில் சனாதனம் என்றால் என்ன ஒரு முடிவுக்கு வந்த பிறகு அதை பற்றி பேசுவோம் என இவ்வாறு கூறினார்.