தேசிய பங்கு சந்தை தொடர்ந்து உச்சம்! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

The national stock market continues to peak Investors are happy-National Stock Exchange Is High

இந்தியாவில் வார தொடக்க நாளன்று பங்கு சந்தையில் புதிதாக வர்த்தகம் தொடங்கப்படும். இந்நிலையில், இந்த வார தொடக்க நாளிலே மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் புதிய உச்சம் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், வார தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து முன்னேற்றம் அடைந்த பங்கு சந்தையில், 3-வது நாளான இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் மும்பை பங்கு சந்தை சற்று சரிவையே சந்தித்துள்ளது. மும்பை பங்கு சந்தையில், 2.94 புள்ளிகள் அல்லது 0.0047 சதவீதம் என்ற அளவில் சற்று சரிவு ஏற்பட்டு 62,678.90 புள்ளிகளாக உள்ளது.

அதேபோல், தேசிய பங்கு சந்தை இன்று 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது. இதன்படி, நிப்டி குறியீடு 11.90 புள்ளிகள் அல்லது 0.064 சதவீதம் உயர்ந்து, 18,629.95 புள்ளிகளாக லாப நோக்குடன் உள்ளது. தேசிய பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் அந்நிய முதலீடு போன்ற காரணங்களால் தேசிய பங்கு சந்தையில் மாற்றம் ஏற்படுகிறது. தேசிய பங்கு சந்தையில் உள்ள நிறுவனங்களில் உள்ள ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் உச்சம் அடைந்து காணப்படுவதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கின்றனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here