தமிழகத்துக்கு அடுத்து வரும் ஆபத்து? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

0
The next danger for Tamil Nadu Shocking information released by Meteorological Department-Rain Information

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு – கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, வருகிற 16 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் றைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் அது மீண்டும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here