ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்..! இவர்களுக்கெல்லாம் சம்பளம் அதிரடி உயர்வு!!

The next jackpot for employees Salary hike for all of them this message useful for you dont miss and read

இந்தியாவில் மத்திய அரசானது தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 7 – வது ஊதிய குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் 4 % சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் நடப்பு ஆண்டு துவங்கியவுடனேயே விலைவாசியை அடிப்படையாகக்கொண்டு தனது முதற் கட்ட வேலையாக இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதனையடுத்து 31% லிருந்து 35% வரை கர்நாடக அரசானது தனது ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை 4% மாக அதிகரித்தது. மேலும் 01.01.2023 தேதியைக் கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வானது கணக்கிடப்படுவதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% மாக அதிகரித்திருக்கிறது. இதனை 01.04.2023 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். தொடர்ந்து ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 4% மாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவில் 38% சதவிகிதமாக இருந்த அகவிலைப்படியானது தற்போது 4% மாக அதிகரித்து 42% என உயர்த்தப்பட்டிருக்கின்றது. மேலும் ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 34% சதவீதமாக அதிகரித்துள்ளனர். இது நடப்பு ஆண்டான ஜனவரி மாதத்தினுடைய 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN