அடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..! எங்கு தெரியுமா?

The next powerful earthquake Do you know where-Earthquake On Philippines

கடந்த சில வாரங்களுக்கு முன் துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் நாட்டையே உலுக்கிய சம்பவமாக மாறிவிட்டது. தற்பொழுது வரை இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பிலிப்பைன்ஸ் நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்றும் இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்க தொடங்கின. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here