செப் 2ல் சூரியனை நோக்கி பயப்போகும் அடுத்த விண்கலம்..! இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

சந்திரயான் 3 விண்கலம் ஆனது நிலவில் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இஸ்ரோ முழுவீச்சில் அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

The next spaceship to fly towards the sun on Sep 2 Action announcement issued by ISRO read it now

இதனைதொடர்ந்து, டுவிட்டர் பதிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது என்னவென்றால் சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆதித்யா L1 விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020 ஆம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது. இந்த விண்கலம், பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்தது.

Also Read : ஜியோ சிம் யூஸ் பண்றவங்களுக்கு குட் நியூஸ்! இனி இன்டர்நெட் ஸ்பீடு வேற லெவல்ல இருக்க போகுது..! அம்பானி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

மேலும், இந்த ஆதித்யா L1 விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. இந்த விண்கலம் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1 ல் நிலைநிறுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தது. இந்த விண்கலம் மூலம் பூமியில் ஏற்படும் மாற்றங்கள், சூரிய புயல்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும்.