தினசரி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்வு..! சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!

The number of devotees visiting Ayyappan daily has increased to 1 lakh

கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில். பொதுவாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில்தான் ஏராளமானோர் ஐயப்ப கோவிலுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் கடுமையான விரதம் இருந்து இருமுடி கட்டி மலைக்கு செல்வார்கள். ஐயப்ப பக்தர்கள் எடுத்து செல்லும் இருமுடியில் சுவாமியை தரிசனம் செய்ய எதுவாக பச்சரிசி, நெய் தேங்காய் போன்றவற்றை ஒரு முடியாகவும் தங்களுக்கு தேவையான உணவை மற்றொரு முடியாகவும் கட்டி எடுத்து செல்வார்கள்.

ALSO READ : மக்களே உஷாரா இருங்க… தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்..!

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜையானது வருகிற 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நேற்றைய தினமும் சன்னிதானத்தில் பக்தர்கள் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், கடந்த அண்டை விட இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சபரிமலைக்கு வரும் சிறார்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்தாக தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top