நாடே எதிர்பார்த்த தேர்தல் வாக்குபதிவு எண்ணிக்கை..! இறுதியில் வென்றது யார் தெரியுமா?

The number of election votes expected by the country Do you know who won in the end read it now

கர்நாடக சட்டமன்றத் தேர்தலானது கடந்த மே-10 ஆம் தேதி அன்று நடந்து முடிந்தது. இதனையடுத்து சட்டமன்றத் தேர்தல் முடிவுகளானது இன்று காலை முதல் வெளி வரத் தொடங்கியிருக்கின்றது. இன்று காலை 8 மணியிலிருந்து கர்நாடகாவில் வாக்குப் பதிவுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளானது மாநிலத்தில் உள்ள 36 மையங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மையங்கள் அனைத்திலும் மொத்தமாக 4256 மேஜைகளை அங்குள்ள 306 அறைகளிலும் வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றது.

மேலும் மொத்தமாக இருக்கும் 224 இடங்களிலும் 10 மணி வாக்கில் காங்கிரஸ் கட்சியானது 108 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. இதைத் தொடர்ந்து 85 தொகுதிகளில் அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க வானது முன்னிலை வகுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 26 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் மேலும் 5 தொகுதிகளில் சுயேச்சை உள்பட மற்ற கட்சிகளும் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றன.

மேலும் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும், சித்தராமையா வருணா தொகுதியிலும் மற்றும் சிகோன் தொகுதியில் முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மையும் தலைவர்களைப் பொருத்தமட்டில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்து பா.ஜ.க.வேட்பாளர் சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் பின்னடைவில் இருக்கிறார். சி.டி.ரவி தமிழக பாஜக பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN