விலை குறைந்தது வெங்காயத்தின் விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!

விலை குறைந்தது வெங்காயத்தின் விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!
விலை குறைந்தது வெங்காயத்தின் விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை அதிரடியாக குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை கடும் உச்சத்தில் இருந்தது. ஆனால் இன்று அதிரடியாக குறைந்து உள்ளது. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நம் அன்றாட வாழ்வில் தினமும் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகின்றோம். காய்கறி வகைகளில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக கோயம்பேடு சந்தைக்கு 1,200 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் வெங்காயம் விலை இன்று அதிரடியாக குறைந்து உள்ளது. அதன்படி, நேற்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்து ரூ.65 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read >> ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்! இதோ முழு விவரங்கள்..!

அதை தொடர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.26, உருளை கிழங்கு ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.110, வெண்டைக்காய் ரூ.25, முள்ளங்கி ரூ.40, முட்டை கோஸ் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.35, இஞ்சி ரூ.230, பூண்டு ரூ.160 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் உச்சத்தில் இருந்த வெங்காயம் இன்று சற்று விலை குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.